Wednesday, October 28, 2009

பிடிக்கவில்லை

என்னை பிடிக்கவில்லை என்ற
வார்த்தை கூட அழகுதான்
அவள் உதடுகள்
உச்சரித்தபோது.....

Friday, March 6, 2009

உண்மையான அழகு...

தெரியாத காற்றும்
புரியாத கவிதையும்
சொல்லாத காதலும்
கலையாத கனவும்

என்றும் அழகுதான்.....

வாழ்க்கை...

நீ விரும்பாத ஒருவரை
விரும்புவதும் கஷ்டம்...
நீ விரும்பிய ஒருவரை
வெறுப்பதும் கஷ்டம்...
இதுதான் வாழ்க்கை....

காதலும்...நட்பும்......

காதல் என்பது
கடவுள் போல
அதை
யாராலும்
பார்க்க முடியாது....!

நட்பு என்பது
தாயின்
கருவரை போல
அதை
பார்க்காதவர்கள்
யாரும் கிடையாது......!!

Thursday, March 5, 2009

காதல் பயணம்

என்
கடைசி ஆசை

நான்
இறந்து விட்ட பிறகு
என்
இதயத்தை எடுத்து
இதயமே இல்லாத
என்
காதலிக்கு
பொருத்துங்கள்......

காதல் தத்துவம்

காதல் தோழ்வியின் சின்னம்
"தாஜ்மஹால்"
வெற்றியின் சின்னம்
இதுவரை இல்லை!!

ஜெய்த்தவன்
காதலை மதிப்பதில்லை..
தோற்றவன்
காதலை மறப்பதில்லை....

இதயத்தில் நீ

நிஜங்களை விட
நினைவுகள்தான்
இனிமையானவை....
என்
இதயத்தில் உன்
நினைப்பை மட்டும்
வைத்திருப்பதினால்...

காதல் விதி

முதல் காதலை அடைய
முயற்சிக்கும்போது
அதற்குரிய தகுதி
நம்மிடம் இருப்பதில்லை.....



எல்லா தகுதிகளையும்
அடைந்துவிட்டபிறகு
முதல் காதல்
நமக்கு
கிடைப்பதில்லை......


இதுதான் "காதல்"

Wednesday, March 4, 2009

உயிர்

நீ விரும்பும்
உயிருக்கு உன்
அன்பு
புரியாது.....!

உன்னை விரும்பும்
உயிருக்கு
உன்னை தவிர
வேறு ஒன்றும்
தெரியாது....!!!


குரு.....

wedjet